Tuesday, 27 July 2010

குற்றம்

பெண்ணே,

உன் பார்வையில்

என் மரணத்தை முத்தமிட்டேன்

யார் மீது குற்றம்..???

பார்வை அற்றவன்

பார்த்து பார்த்து

பழக ஆசை

ஆனால்

பார்வை இல்லை..!!

வரம்

பெண்ணே,

வரம் தருவாயா

உன் மூச்சு காற்றில்

நான் உயிர் வாழ..!!

அமுதம்

அமுதம் கண்டேன், பருகினேன்

என்னவளின் வியர்வையில்..!!

காதல்

அன்று

படிச்சி படிச்சி

சொன்னார்கள்

ஆனால் இன்று

மிஞ்சியதோ

குவாட்டரும், தாடியும் தான்

வித்தியாசம்

பெண்ணே,

உனக்கும் எனக்கும் ஓர் வித்தியாசம் தான்

நான் நினைவுகளோடு மட்டும் வாழ்கிறேன்

நீயோ நிஜங்களோடு வாழ்கிறாய்

இது நியாமா..???

மாமனார்

வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு மருமகள்

வருவாளா என்று ஏங்கினேன்

வந்தாள், ஏற்றினாள்

ஏற்றிய கையோடு காட்டினாள்

முதியோர் இல்லம்..

படையெடுப்பு

படையெடுத்தேன் என்னவளை தொட்ட

வண்ணத்துப்பூச்சியை நோக்கி...!!

காதலா

என்றும் பேசாத நான்

இன்று பூ , செடி , மரங்களுடன் பேசுகிறேன்

இது காதலா..???

படிக்காதவன்

அன்று

தள்ளி வைத்தேன்

பள்ளி நாட்களை..!!

இன்று

தள்ளி வைக்கிறது

படித்த நாகரீக உலகம்..!!

சுவாசம்

நான் சுவாசிப்பதை நிறுத்தி கொள்ள

ஆசை பட்டேன் ஆனால் முடியவில்லை

காரணம் என்னுள் இருக்கும் நீ உயிர்

வாழ வேண்டும் என்று

பயணம்

பயணங்கள் முடிவதில்லை

ஆம் அன்று

பயணிக்கும் போது சந்தித்தேன்

இன்றும் பயணிக்கிறேன் அவளைத்தேடி..!!